நீரிழிவு நோயாளிகள் ஒருநாளைக்கு எவ்வளவு பேரீட்சை சாப்பிடலாம்! அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். அதற்காக டீ, காபி கூட சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதுண்டு. சர்க்கரை என்பது சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரையில் வெறும் வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என்ற எல்லா வகையான சர்க்கரையுமே பிரச்சினை தான். பழங்களிலேயே அதிக சுவையுடையது என்றால் அது பேரிச்சம் பழம் தான். ஆனால் அதை நாம் கொட்டை வகைகளோடு சேர்த்து விட்டோம். ஆனால் பேரிச்சை பழ வகைகளில் ஒன்று தான். தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே அவ்வளவு ஊட்டச்சத்துக்களும் பேரிச்சை பழத்தில் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுவதுண்டு.

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது, பாலில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. அதன்மூலம் நம்முடைய ரத்த சிவப்பணுத் தட்டுக்கள் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

பேரீட்சை பழம் டயட்டை ...

தனக்குப் பிடித்த பேரிச்சம் பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று என்ற வகையில் அப்படியாகவோ சாப்பிட்டால் பெரிதாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆனால் ரத்த சர்க்கரையால் அதிகமாக அவதிப்படுபவர்களாக இருப்பவரானால் நிச்சயம் இந்த ஒரு பேரிச்சையால் சிறிதளவு ரத்த சர்க்கரையின் அளவில் மாற்றம் இருக்கும். பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

2-3 பேரிட்சை

இரண்டு பேரிட்சை கூட எடுத்துக் கொள்ளலாம். பெரிய மாற்றம் ஏற்படாது. ஒருவேளை மூன்று பேரிட்சைக்கும் மேல் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுடைய ரத்தத்தில் கார்போஹைட்ரேட்டின் அளவை சோதிக்க வேண்டும். அப்படி கார்போ அளவு அதிகமாக இருநு்தால் நிச்சயம் கார்புாஹைட்ரேட் நிறைந்தத உணவுகளைக் குறைத்துக் கொள்வது மிக அவசியம்.

நான்கைந்து பேரிச்சைக்கு மேல் சாப்பிடலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது. ஒரு பௌல் அளவுக்கு உருளைக்கிழங்கு எப்படி சாப்பிடுவது ஆபத்தோ அதே அளவு ஆபத்து உடையது பேரிச்சம் பழமும். பொதுவாக இதெல்லாம் உங்களுடைய மருத்துவர்கள் உங்களுக்கு அறிவுறுத்தி இருப்பார்கள். அப்படி அறிவுறுத்தவில்லை என்றால் இதை ஃபாலோ செய்யுங்கள். சர்க்கரையைப் போன்று தான் இதுவும் அளவைக் கூட்டும். அதனால் ஒன்று அல்லது இரண்டு பேரிட்சைப் பழத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *