கைலாசத்தில் ஆடல், பாடல் என கலக்கும் சிஷ்யைகள் !! வைரலாகும் கைலாசா வீடியோ இதோ !!

பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்தியானந்தாவின் கைலாசா எவ்வாறு இருக்கின்றது என்பதை அவர்களது சிஷ்யைகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள காட்சி தீயாய் பரவி வருகின்றது. காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் பிரபல சாமியார் நித்யானந்தா கைலாசத்திற்காக புதிய பணத்தை அறிமுகப்படுத்த போவதாக சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் அறிவித்துள்ளார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, நித்தியானந்தா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவை வாங்கிவிட்டதாக அறிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த தீவிற்கு ‘கைலாசா’ என்று பெயரிட்டு அதன் பிரதமராகப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், தன்னுடைய பக்தர்கள் கைலாசாவிற்கு வந்து செல்வதற்கு தனி பாஸ்போர்ட்டையும் வெளியிட்டதோடு, கைலாசாவிற்கு செல்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார்.

தற்போது தனி கரன்சியை வெளியிடப்போவதாக கூறியுள்ளார் நித்தியானந்தா. இந்நிலையில் நித்தியின் கைலாசா எவ்வாறு இருக்கின்றது என்பதை சிஷ்யைகள் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

ஜெய் நித்தியானந்தம்..

அன்பின் நித்தியானந்தர் அவர்களுக்கு.. சில வருடங்களுக்கு முன் தங்களது ஆன்மீக ஆராய்ச்சி காணொளி வெளியாகி எங்களையெல்லாம் பரவசமாக்கியபோது, தங்களை கிண்டல் செய்து குமுதம் ரிப்போர்ட்டரில் கார்ட்டூன் வரைந்ததற்காக என் மீதும் குமுதத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தீர்கள்.. அப்போது எனக்கு தங்கள் மகிமை தெரியவில்லை.. ஆனால் இப்போது கைலாசா நாட்டில் மகிழ்ச்சியாக உலாவரும் தங்களது பிரஜைகளின் காணொளிகளை பார்க்கும்போது,உங்களை விமர்சித்து எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன் என்பது புரிகிறது.. தினமும் மங்கி பாத் (குரங்கு குளியல்) மூலம் நாட்டு மக்களை பீதிக்குள்ளாக்கி கதற விடும் மோடி ஆட்சியில் வாழ்வதை விட , கொரோனா காலத்தில் கூட தன் பிரஜைகளை ஆடலும் பாடலுமாக வைத்திருக்கும் உங்கள் ஆட்சியில் வாழ்வதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.ஆகவே அறிந்தோ அறியாமலோ உங்களை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்த இந்த பாவியை மன்னித்து என்னையும் தங்களது கைலாசா நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.. :)-கார்ட்டூனிஸ்ட் பாலா

Posted by Cartoonist Bala on Friday, August 14, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *