கைலாசாவில் ஹொட்டல் திறக்க அனுமதி கேட்ட நபர் !! நித்தியானந்தா கொடுத்த பதில்…!!

சுவாமி நித்தியானந்தர் என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா எனவும் அறியப்படுபவர் ஒரு ஆன்மீக குரு ஆவார். இவர் பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த பீடத்திற்கு கனடா முதலான 50 நாடுகளில் கிளைகள் உள்ளன. உலக அலவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இவர் தன்னுடைய சீடர்களுக்காக சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டவரும் ஆவார். இவர் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டிற்கான கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் உள்ளிட்டவற்றை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

டிவி பார்ப்பதை இந்துக்கள் நிறுத்துங்கள்... ஆன்லைன் நியூஸ் ...

இந்நிலையில், கைலாசாவில் உணவகங்களை திறக்க வேண்டி, மதுரையை சேர்ந்த ஹோட்டலின் உரிமையாளர் குமார் அனுமதிக்கான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கைலாசாவில் தங்களது உணவகங்கள் செயல்பட அனுமதி தர வேண்டும் என்றும், நித்தியானந்தா அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கைலாசாவ கண்டுபிடிக்கலாம் முடியாது" : நக்கல் விட்ட நித்தியானந்தா!

இதனைத் தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்த பின், தனது நிர்வாகிகளிடம் கூறி, உணவகங்களை கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதோ அவரின் புகைப்படம் ….

கைலாசாவில் ஹொட்டல் திறக்க அனுமதி கேட்ட நபருக்கு நித்தியானந்தா ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *