10 கிலோமீட்டர் நடந்து 2.74 கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன்! முழு தொகையையும் நிதியாக கொடுத்த ஆச்சரியம்….!

லண்டனில் பெற்றோர்களால் நிகழ்ந்த வ ன் மு றை யில் பா திக்கப்பட்ட சிறுவன் தன் உ யி ரை காஸப்பாற்றிய மருத்துவமனைக்கு சுமார் 2 கோடிக்கு மேல் நிதி திரட்டி கொடுத்து ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளார்.லண்டனை சேர்ந்த டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது வீட்டில் நடந்த பிரச்சனையில் பெற்றோர் ஏற்படுத்திய கா யத்தால் அவருடைய இரண்டு கால்களையும் அகற்றியுள்ளனர்.

தற்போது அவர் செயற்கைக் கால்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது வளர்ப்பு பெற்றோர்களுடன் வாழ்ந்து வரும் டோனி சிறுவயதில் தன் உ யி ரை கா ப்பாற்றிய மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளார்.

இதற்கு காரணம் இரண்டாம் உ லகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர், கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்த அவர் தானும் இப்படி செய்ய வேண்டும் என ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தனது உ யிரை கா ப்பாற்றிய லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு, தன் செயற்கைக் கால்களின் உதவியுடனும், ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளார்.

டோனியின் முயற்சியை பார்த்த மக்கள் அவரை உற்சாகம் ஊட்டும் வகையில் டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை அனுப்பியுள்ளனர்.இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து இணையவாசிகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *